Published on 19/08/2021 | Edited on 19/08/2021
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள், மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டுவருகிறது. விரைவில் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் வர்த்தக விநியோகம் தொடங்கவுள்ளது. இத்தடுப்பூசிகளைத் தவிர மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இந்தியா அவசரகால அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தநிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சென்னையில் நடத்திய ஆய்வு ஒன்றில், டெல்டா வகை கரோனாவிற்கு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் பாதிக்கும் திறன் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவு எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.