கள்ளக்குறிச்சி அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சென்று திரும்பிய பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சங்கராபுரத்தைச் சேர்ந்த 54 பேர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சாமி தரிசனத்திற்காக தனியார் பேருந்தில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் அருத்தங்குடி புதூர் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது பேருந்து ஓட்டுநர் சற்று கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட நிலையில், அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பிடம் இந்த விபத்து சம்பவத்தில் 30 பக்தர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பக்தர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.