Skip to main content

‘நமக்காகத் தான் பூமி உருண்டோடுதே...’ - காதலரை கரம் பிடித்த சாக்‌ஷி அகர்வால்

Published on 03/01/2025 | Edited on 03/01/2025

 

காலா, விஸ்வாசம், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சாக்‌ஷி அகர்வால். கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான அதர்மக் கதைகள் படத்தில் நடித்திருந்தார். கைவசம் கெஸ்ட் மற்றும் தி நைட் ஆகிய படங்களை வைத்துள்ளார். 

இந்த நிலையில் இன்று தனக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சாக்‌ஷி அகர்வால், சிறுவயது நண்பர் தற்போது இணையராக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். 

இவரது திருமணம் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் சாக்‌ஷி அகர்வாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்