Skip to main content

மாணவர்களுக்கு பொங்கலுக்குள் லேப்டாப் மற்றும் சைக்கிள்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

Laptop and bicycle in Pongal for students

 

மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டி ஆகியவை பொங்கல் பண்டிகைக்குள் கொடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கூறியுள்ளார்.

 

புதுச்சேரியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியைப் பார்வையிட சக மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தனர். இக்கண்காட்சியின் நிறைவு விழா இன்று (2/12/22) நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கலந்து கொண்டார்.

 

விழாவில் பேசிய அவர், “பிள்ளைகளுக்கு வசதி, வாய்ப்புகளைக் கொடுத்தால் அவர்கள் தொழில்நுட்பத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருவார்கள். நம்முடைய நாடு சிறந்து விளங்க மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கி, மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டுவர பல முடிவுகளை எடுத்து வருகிறது. 

 

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்கு அரசு கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றைத் தொடங்கியுள்ளது.  மருத்துவ பல்கலைக்கழகத்தையும் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

புதிய வேலைவாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் திறனிற்கேற்ப அவர்களது வெளிப்படுத்தும் திறன் குறைவாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனங்கள் மாணவர்களை பணியில் அமர்த்த தயக்கம் காட்டுவதாகச் சொல்லுகிறார்கள். மாணவர்கள் எங்கும் தயக்கம்  இல்லாமல் பேச வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்