மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சாலை தடுப்புச் சுவரின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சங்கரன்கோவில், சிவகிரி பகுதி வழியாக தனியார் பேருந்து ஒன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் மொத்தம் 82 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தை ஓட்டுநர் வைரமுத்து என்பவர் இயக்கியுள்ளார். திருமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள ஆனந்தா தியேட்டர் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் சென்ற பொழுது ஸ்டேட் பேங்க் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த எட்டு பெண்கள் உட்பட 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.