Skip to main content

"இதுவே சரியான தருணம்".. கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்...

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் நிகழ்ந்த இடங்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

delhi highcourt orders arvind kejriwal

 

 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது.

இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிக்கு ஹெல்ப்லைன் அமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அனுப்ப தனியார் ஆம்புலன்ஸ்கள் வழங்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளுடன் மறுவாழ்வுக்கான முகாம்களை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்