மோடி பிறந்தநாளன்று குஜராத் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு ஒரு அறிக்கையை அனுப்பியது. அதில் மோடி பிறந்தநாளன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப வேண்டும். அல்லது, அமைதியாக கடக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதுபோல இந்த அறிக்கை இருப்பதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது நாடு முழுவதும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும், அதை பாராட்டி குஜராத் பள்ளிகளும் கல்லூரிகளும் விவாதங்களை நடத்த வேண்டும் அல்லது அமைதியாக கடந்துவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அரசு மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.