/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CSDCX.jpg)
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அதேபோல் எல்லைப் பிரச்சனை தொடர்பாகவும் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில்அவர் தற்போது, மோடி அரசு இந்தியப் பகுதிகளைச் சீனாவிடம் இழந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.இதுதொடர்பாகஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசு அமைதியாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளைச் சீனாவிடம் இழந்து வருகிறது. இதனைத்தவிர இந்தியா பல அண்டை நாடுகளின் நட்பையும் சீனாவிடம் இழந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
மேலும், "விரைவில் காஷ்மீரில் ஒரு பயங்கரவாதப் போருக்குப் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தயாராகி வருகின்றன. இவை மாஸ்டர் ஸ்ட்ரோக்காகஇருக்க முடியாது" எனத்தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)