Skip to main content

ராணி எலிசபெத் மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது!

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

 

A Day of Mourning for Queen Elizabeth's india government flag


பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி, இந்தியாவில் ஒரு நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரு நாள் துக்க அனுசரிப்பு நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று காலமானார். இதையடுத்து, அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணியின் மறைவையொட்டி, இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. 

 

அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதேபோல், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, ராணி எலிசபெத் மறைவுக்காக துக்கம் அனுசரிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுக் கட்டடங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதேபோல், சென்னையில் ரிசர்வ் வங்கி கட்டிடம் மற்றும்  விமான நிலையம் ஆகிய இடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

 

அதே நேரத்தில், ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்