கரோனா வைரஸ் எதிரொலியால் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31 பேருக்கு கரோனா வைரஸ் தோற்று உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாளை (07/03/2020) தமிழகம் வரும் மத்திய சுகாதாரத் துறை ஹர்ஷ் வர்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்கிறார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் எதிரொலியால் 1,500 பேர் வரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக சென்னை, ஜெய்சால்மர், செகந்திராபாத், கொல்கத்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.