Skip to main content

“தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை” - டிடிவி தினகரன் கண்டனம்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

Dhinakaran condemns police in Tamil Nadu have no security

உசிலம்பட்டியில் மதுபானக்கடை அருகே காவலர் கல்லால் அடித்துக் கொலை – தமிழகத்தை கொலைக் களமாக மாற்றிவரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதவில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் திரு.முத்துக்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக பொதுவெளியில் நடமாட முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாள் தவறாமல் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு எதாவது ஒரு காரணத்தையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி அதன் பின்னால் மறைந்து கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த படுகொலைக்கு என்ன கதை சொல்லப் போகிறார்?

எனவே, ஒவ்வொரு கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் காரணம் தேடி நேரத்தை வீணடிக்காமல், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்