Skip to main content

7 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

jkl

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456 ஆக உள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் தற்போது வரை 6,97,836 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 19,700 பேர் இந்தத் தொற்று காரணமாக இதுவரை மரணமடைந்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்