
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அன்பழகன்(59) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் அன்பழகன் ,9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அன்பழகன் இன்னும் 3 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.