டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் டெல்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இத்தகைய சூழலில் தான் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவலை தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் அதுல் கர்க் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான பயணி ஒருவர் கூறுகையில், " நான் பயணிக்க உள்ள விமானம் காலை 9 மணிக்கு புறப்பட உள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததை அறிந்தேன். இதனால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து யாஷ் என்ற பயணி கூறுகையில், "பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு காலை 08 : 15 மணிக்கு விமானத்தில் வந்தேன். இங்கு காலை 05 : 00 - 05 : 15 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது எனக் கேள்விப்பட்டேன்” எனத் தெரிவித்தார்.