இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸூன் தாக்கம் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 125 பேரும், கேரளாவில் 101 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் முற்றிலும் குணமடைத்து வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.