Published on 31/01/2019 | Edited on 31/01/2019

ஹரியானா மாநிலத்திலுள்ள ஜிந்த் தொகுதியின் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலையில் உள்ளது. ஐந்து வது சுற்றுகளின் நிலவரப்படி, பாஜக -21052, ஜனநாயக் ஜனதா கட்சி - 15315 , காங்கிரஸ் -8813
அதேபோல இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற ராம்கர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கெண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சுற்றுகள் முடிவுகளின்படி காங்கிரஸ் வேட்பாளர் சாபியா கான் 83311 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 71083 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார்.