Skip to main content

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் கேரள பழங்குடியின பெண்ணுக்கு ராகுல் காந்தி வாழ்த்து...

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், கமலம் தம்பதியின் மகளான ஸ்ரீதன்யா இந்திய அளவில் 410 ஆவது இடம் பிடித்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

 

rahul gandhi wishes for kerala tribe girl who passed upsc exam

 

இதன்மூலம் கேரளாவில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் கேரள பழங்குடியின பெண் என்ற பெருமையை ஸ்ரீதன்யா பெற்றுள்ளார். இவரும் இவரது பெற்றோரும் தொழுவண்ணா பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். படிப்பில் ஆர்வம் உள்ள ஸ்ரீதன்யாவுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக கடினமாக உழைத்த அவர் தற்போது தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

இவரின் இந்த சாதனையை பாராட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், "ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரின் கனவை நனவாக்கியுள்ளது. அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்