மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். ஆகஸ்ட் 7- ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தனது பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவிருக்கிறார். மேற்கு வங்கம் மாநிலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து, பிரதமரையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் காசு வேலை ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தொடர்புடைய இடங்களில் ஏராளமான பணம் பிடிபட்டு வரும் சூழலில், அவரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.