Skip to main content

கரோனா காலத்திலும் பிரியாணியை விடாத இந்தியர்கள்! 

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

swiggy

 

'பிரியாணி' - இந்த உணவு வகைக்கு எந்த நேரத்திலும், கரோனா பெருந்தொடரிலும் கூட மவுசு குறையாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. பிரபல இணைய உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, இந்தாண்டு தங்கள் நிறுவனம் விநியோகித்த உணவுகள் பற்றி புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் சிக்கன் பிரியாணி முதலிடத்தையும், மசால் தோசை இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன.

 

இந்தாண்டில் பிரியாணி, நொடிக்கு இரண்டுமுறைக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தநிறுவனத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலேயே அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யபட்டது பெங்களூரில். இப்பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

 

மேலும், மிகவும் சீக்கிரமாக ஸ்விகி நிறுவனத்தில் ஆர்டர் செய்தது சென்னை வாசிகள்தான். அதிகாலை 4.59 மணிக்கு ஒருவர் 'சீஸ் ப்ரைஸும்', 5 மணிக்கு ஒருவர் சிக்கன் நூடுல்ஸும் ஆர்டர் செய்துள்ளனர்.

 

மேலும் ஊரடங்கு காலத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பானிபூரி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்விகி நிறுவனம் கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்