Skip to main content

காதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை!!!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

உத்திரபிரதேசம், பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. அவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அஜிதேஷ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த திருமணம் நடந்தால்... என கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். 
 

sakshi mishra



இதனால் சாக்‌ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “என்னுடைய திருமணத்திற்கு என் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. சில ரவுடிகளை ஏவிவிட்டு எங்களை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். எனவே எங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கூறிய அவர், எனது உயிருக்கோ, எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு என் தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அவரை நான் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவேன்.”

இதைத்தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு, ஒரு பொதுநல மனுவை சாக்‌ஷி மற்றும் அவர் கணவர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. சாக்‌ஷியும், அவரது கணவரும் காலை வந்திருந்தனர். 8.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிலர், அஜிதேஷை காரில் கடத்தி சென்றனர். நீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகளைக்கொண்டு கடத்திய காரின் நம்பரை கண்டறிந்துள்ளனர். இந்த கார் ஆக்ராவைச் சேர்ந்தது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்