Skip to main content

கோவா தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணியா? - அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

arvind kejriwal

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த ஐந்து மாநில தேர்தலிலும் தடம் பதிக்க முயற்சி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

 

இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவைத் தோற்கடிக்க ஒன்றாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தச்சூழலில் கோவா மாநிலத்திற்கு வருகை தந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவாலிடம், ஆம் ஆத்மி கட்சி திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி அமைக்குமா என்பது குறித்த கேள்விக்கு, தேர்தலுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதற்கு அவசியம் ஏற்படுவதுபோல் மக்கள் வாக்களித்தால், பாஜக அல்லாத கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து நாம் யோசிக்கலாம். ஆனால் அதற்கான தேவை இருக்காது என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்