Skip to main content

'40 வயதில் 4 குழந்தைகள்' சோதனை குழாய் மூலம் 'சாதனை' படைத்த கர்நாடக பெண்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன் லால். இவருடைய மனைவியான தாலிபாய்க்கு வயது 40. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் 21 வயது மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மற்றொரு மகள் மாற்றுத்திறனாளி ஆவார். சமீபத்தில் மகன் இறந்துவிட்டார். இந்த நிலையில் தங்களை பார்த்துக்கொள்ள மகன் வேண்டும் என்று தம்பதியினர் இருவரும் நினைத்துள்ளனர். இதனால் சோதனை குழாய் முறையில் தாலிபாய் குழந்தை பெற முடிவு செய்தார்.

இதற்கான வழிமுறைகள் பெங்களூருவில் வைத்து தாலிபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவர் கர்ப்பம் ஆனார். நேற்று முன்தினம் இரவு தாலிபாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்