![jhk](http://image.nakkheeran.in/cdn/farfuture/tugg7tIHkcjfR5Z5FHhQkE4VbUZ816ZPTmgkEJvDraM/1589266131/sites/default/files/inline-images/fghk_6.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 70,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மூன்று கட்ட ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த கரோனா தொற்றில் இருந்து மனித சமூகத்தைக் காக்க வேண்டுமானால் சமூக இடைவெளியைப் பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தற்போது நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் மூன்று அடி தூரம் இடைவெளி விட்டு இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைக்கப்பட்ட பேருந்துகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.