ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். அதுபோல் 2019-2020 ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2019-2020க்கான நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பயண்பாடு குறைந்துள்ளது அதனால் இந்த நிதியாண்டில் அச்சடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அதேசமயம் இந்த ஆண்டில் 27,398 நோட்டுகள் புழகத்தில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் மற்றும் புழகத்தில் விடுவது அதிகமாகியுள்ளது என்றும் 1,463 கோடி 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆர்டர் வழங்கப்பட்டு 1,200 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, விநியோகமும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கள்ள நோட்டுகளின் புழக்கம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ரூபாய் கள்ள நோட்டு 144.6 சதவீதமும், 50 ரூபாய் நோட்டு 28.7 சதவீதமும், 200 ரூபாய் நோட்டு 151.2 சதவீதமும், 500 ரூபாய் நோட்டு 37.7 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகள் புழகத்தின் எண்ணிக்கை மொத்தம் 2 கோடிய 96 இலட்சத்து 695 எனத் தெரிவித்துள்ளது. ரூ. 20, ரூ.100, ரூ.2000 ஆகிய நோட்டுகளின் கள்ள புழக்கம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.