மைனர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி போக்சோ சட்டத்தில் கைதாவது ஆண்கள் மட்டும்தான் என்றெண்ணி விடாதீர்கள். பெண்களில் வெகு சிலரும் கொடுமையான அத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைதாகின்றனர்.
திருவனந்தபுரம் – நெடுமங்காடு – கருப்பூரைச் சேர்ந்தவள் திவ்யா. மூன்று குழந்தைகளின் தாயான இவள், கணவரிடமிருந்து விவகாரத்து பெற்றவள். நெடுமங்காடு காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ்குமார் போக்சோ சட்டத்தில் இவளைக் கைது செய்திருக்கிறார். ஏன் தெரியுமா?
திவ்யாவின் பக்கத்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கிறார் மாற்றுத்திறனாளியான ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்ட நிலையில், தன் உடலிலுள்ள சில அறிகுறிகளை பெற்றோரிடம் காண்பிக்கிறார். உடனே, பெற்றோர் ஹரியிடம் விசாரித்திருக்கின்றனர். ஹரி நடந்ததைச் சொல்லிவிட, அதிர்ந்துபோன அவர்கள், நெடுமங்காடு காவல்நிலையத்தில் திவ்யா மீது புகார் அளித்தனர்.
கணவர் இல்லாமல் தனிமையில் வாழ்ந்த திவ்யா, மாற்றுத்திறனாளி என்பதால் வெளியில் தெரிந்துவிட வாய்ப்பில்லை என்று கருதி, ஹரியைத் தன் உடற்பசிக்கு இரையாக்கி வந்திருக்கிறார். மைனர் வயது ஹரிக்கு திவ்யா தந்த தொந்தரவால் உடல் பாதிப்புக்கு ஆளானது. காவல்துறை நடத்திய விசாரணையிலும், திவ்யா வரம்புமீறி ஹரியுடன் நடந்துகொண்டது உறுதியாகிவிட, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள்.
ஒரு தாயாக இருந்து ஹரி மீது அன்பு செலுத்த வேண்டிய இடத்திலுள்ள திவ்யாவின் மனதில் இப்படி ஒரு வக்கிரம் புகுந்து ஆட்டுவித்தது கொடுமைதான்!