Skip to main content

இந்திய ரயில்வேயில் நுழைந்த அமேசான்!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

amazon

 

அமேசான் மூலம் இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வகித்து வருகிறது. தற்போது இவ்வமைப்புடன் அமேசான் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் தளங்களின் மூலம் இனி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக அமேசான் ஆண்ட்ராய்டு செயலியிலும், மொபைல் ஃபோனுக்காக அமேசான் இணையதளத்திலும் இந்த வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐஃபோனுக்கான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

முன்பதிவு செய்வது, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வது என அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. அமேசான் பே அல்லது பிற இணையதள பணப்பரிவர்த்தனை முறை மூலம் முன்பதிவுக்கான கட்டணம் செலுத்தும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் நூதன முறையில் மோசடி!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
issue for through the IRCTC website

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்பவர் ரயில் மூலம் நாகர்கோயில் செல்லவிருந்த தனது ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். அப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவிக்கு (FOR HELP) என்று இருந்த 9832603458 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது ரயில் பயண கட்ட பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர் முனையில் பேசியவர் ஸ்ரீதரனின் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அதனை நம்பி ஸ்ரீதரனும் தனது ஏடிஎம் கார்டு விவரங்களை கூறி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்த எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது; ரயில் பயணிகள் அவதி

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

IRCTC website down; Train passengers suffer

 

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் தற்காலிகமாக முடங்கியதால் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் எனவும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்படின் ரயில்வே உதவி மையத்தைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் 14646,0755 - 6610661 & 0755-4090600 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது etickets@irctc.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மதியம் 12 மணியளவில் இருந்து சுமார் அரை மணி நேரமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.