Published on 20/07/2021 | Edited on 21/07/2021

மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், "மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகிறது. இதில் அரசு எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. அனைத்து மாநில மக்களையும் ஒரே நேர்கோட்டில்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றஞ்சாட்டுவது தேவையில்லாதது. நாளொன்றுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கிவருகிறோம்" என்றார்.