Published on 24/09/2018 | Edited on 24/09/2018

கடந்த மாதம் கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால், 13 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் அவதிப்பட்டு வந்தது. இதனால் சுமார் 19,000 கோடி அளவிலான சேதம் அடைந்தது. இந்த துய்றிலிருந்து கேரளா தற்போதுதான் மீண்டு வருகிறது.
இந்நிலையில், கேரளாவிலிருக்கும் பத்தினம்திட்டா, இடுக்கி, வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையான ’யெல்லோ அலர்ட்’ டெல்லி வானிலை அறிவித்துள்ளது. செப்டம்பர் 25, செப்டம்பர் 26 ஆம் தேதி 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகிகளிடம் எச்சரித்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.