அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டவும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டு உச்சநீதிமன்ம் கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான கல்யாண் சிங் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பின் போது உத்தரபிரதேச முதல்வராக இருந்த இவர் லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி தீர்ப்பு தொடர்பாக அவர் கூறியதாவது, "நான் எப்போதும் ராமபிரான் பக்தன். அயோத்தியில் பிரமாண்டமான கோவில் கட்ட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கனவு கண்டு வருகிறேன். அங்கு கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் கடைசியில் எனது கனவு நிறைவேறியுள்ளது. விரைவில் அயோத்தி சென்று வழிபாடு நடத்துவேன்" என்றார்.