Published on 30/08/2018 | Edited on 30/08/2018

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தபின் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி," இன்றுடன் நான் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களாகிறது. அதனால்தான் நான் இங்கு வந்து ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தேன். ராகுல் காந்திக்கு கர்நாடகாவில் நடக்கும் ஆட்சி முறை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எங்களுடைய அரசாங்ம் நன்கு செயலாற்றவும், சுமுகமாகவும் இருக்கிறது " என்று பேட்டியளித்துள்ளார்.