Skip to main content

2021 தேர்தலுக்காக அரசுப் பணியாளர்களை களமிறக்கிய ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளி!!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

muthur

-கீரன்

 

தற்போதுள்ள கரோனா காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிவாரண உதவிகள் எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அளிக்கப்படுகிறது என ஆளும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களே கூறி வருகின்றனர்.

 

இந்தநிலையில் கரோனா காலத்தை பயன்படுத்தி அமைச்சரவையிலும், கட்சியிலும் முக்கிய நபரான மணியானவர் தற்போதே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைக் கோவையில் தொடங்கிவிட்டார். இதில் அவர் தனது கட்சிக்காரர்களைக் கூட நம்பாமல், மாவட்ட, வட்ட, மாநகராட்சி அலுவலங்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்த சுமார் 100 அலுவலக உதவியாளர்களை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறாராம். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்க, வீடு வீடாகக் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களை, கட்சி அலுவலகத்திலும், தனது இல்லத்திலும் தங்க வைத்துள்ளாராம். கடந்த மே 18ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணிகள், வரும் சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும் என்கிறார்கள். 

 

மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ. துணை கலெக்டர் அளவில் உள்ள அதிகாரிகளும், இந்த 100 அலுவலக உதவியாளர்களை ஆளும் கட்சியின் பணிக்காக அனுப்பியதுடன், அலுவலக வருகைப் பதிவேட்டில் அலுவலகப் பணி என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார்களாம். இவ்வளவு வெளிப்படையாக அரசுப் பணியாளர்களை மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறவர்களை தனது கட்சிப் பணிக்காவும், சொந்தப் பணிக்காகவும் பயன்படுத்தி வருவது தொடர்ந்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்ற விவாதமும் கோவையில் நடக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்