
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் கெய்க்வாட். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்த நிலையில், இவரது மனைவி விவகாரத்துப் பெறாமல் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனைவியின் குடும்பத்திடம் சேகர் முறையிட்டுள்ளார்.
ஆனால், சேகர் தரப்பினருக்கும், அவரது மனைவி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சேகர், தனது மனைவிக்கு எதிராக சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நீதி வேண்டி, சிவாஜி நகர் காவல் நிலையம் முன்பு வந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை கண்ட காவல் நிலைய வளாகத்தில் இருந்த போலீசார் உடனடியாக, தீயை அணைத்து சேகரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீதம் வரை எரிந்த நிலையில் இருக்கும் சேகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.