Skip to main content

“மக்களை விரக்தி அடையச் செய்வதே அவர்களின் நோக்கம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

 “Their aim is to make people desperate” - Governor RN Ravi

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

மேலும் இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கோவை தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

 

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “கோவையில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். கோவையில் நடந்தது திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல். அதை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. பயங்கரவாதத்தை உருவாக்கும் இடமாகக் கோவை உள்ளது. கோவை தாக்குதலுக்குப் பின் பெரிய திட்டங்கள் இருந்துள்ளன. இந்த சம்பவத்தை உரிய நேரத்தில் என்.ஐ.ஏ.விடம் விசாரணைக்குக் கொடுத்திருக்க வேண்டும்.  பயங்கரவாதம் மூலம் மக்களை விரக்தி அடையச் செய்வதே அவர்களின் நோக்கம். தமிழகக் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவைக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கூறினார். 


 

 

சார்ந்த செய்திகள்