
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் செங்கல் சுமக்க வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையம் அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. நேற்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் சிலரை பள்ளிக்கு வரவழைத்து பள்ளி வளாகத்தில் இருந்த செங்கற்களை அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் செய்யும் இடத்திற்கு எடுத்துச் சென்று வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்களின் அறிவுறுத்தல் படி மாணவர்கள் அங்கிருந்த செங்கல்களை எடுத்துச் சென்றனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் ஆசிரியர்கள் வீடியோ எடுக்க வேண்டாம் என அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.