கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,
நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியவில்லை. அவர் அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு கொண்டு, விழித்து கொண்டிருக்கிறார். அவர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது. எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் அவரிடம் இல்லை. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் என்னுடன் விவாதிக்க தயாரா?.
இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க தவறிய அவரை பொதுமக்கள் நிராகரிப்பார்கள். அவர் அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்து காணாமல் போய் விடுவார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். அதைப்பற்றி கீதாஜீவன் எம்.எல்.ஏ. கவலைப்பட வேண்டாம். கீதாஜீவன் அமைச்சராக இருந்தபோதுகூட தூத்துக்குடியில் 4-வது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் ரூ.295 கோடியில் 4-வது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கீதாஜீவன் பொது மேடைக்கு வந்தால், அவரிடம் இதுகுறித்து நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.