Published on 27/07/2018 | Edited on 27/07/2018

உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த பெண் என்ற பெருமையை பெற்ற கின்னஸ் சாதனை பெண்மணி உயிரிழந்துள்ளார்.
உலகிலேயே அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தவர்கள் பட்டியலில் அண்மையில் கின்னஸ் சாதனை படைத்த ஜியோ மயாக்கோ என்ற 117 வயதுடைய ஜப்பானிய பெண்மணி ஜூலை 22-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஜப்பானின் வக்கயமாவிலுள்ள கன்சை பகுதியில் மே 2-ஆம் தேதி 1901-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு அண்மையில்தான் அதிகநாட்கள் உயிர் வாழ்ந்த பெண் என்ற சாதனையால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இவர் பிறந்து 117 வருடங்கள் 81 நாட்கள் உயிருடன் இருந்துள்ளார். அண்மையில் இந்த சாதனையை படைத்த ஜியோ மயாக்கோ தற்போது உயிரிழந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.