அடுத்த வாரம் முதல் தங்களது நாட்டில் பைசர் தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதத்திற்கு மேலாக பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது இந்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் தங்களது நாட்டில் பைசர் தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 15 முதல் இதன் விநியோகம் அந்நாட்டில் துவங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைத் தகுந்த பராமரிப்பு வெப்பநிலையில் வைப்பது வெப்ப மண்டல நாடுகளுக்குச் சிக்கலாக அமையலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், பைசர் கண்டறிந்துள்ள இந்த தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.