உயிருடன் இருந்த ஒரு பெண்ணை பன்றிகள் கடித்து சாப்பிட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. ரஷ்யாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு இது பல ஊடகங்களிலும் நேற்று செய்தியாக வெளியானது. இந்நிலையில் அதற்கான காரணத்தை தற்போது அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவை சேர்ந்த உட்மர்ஷியா நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் இரவு நேரத்தில் பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக அதன் இருப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரெனெ வலிப்பு ஏற்பட்டு அவர் ஆண்டு மயங்கி விழுந்துள்ளார். அந்த கூடாரத்துக்குள் மயங்கி விழுந்த 56 வயதுள்ள அந்த பெண்ணை பன்றிகள் சாப்பிட ஆரம்பித்துள்ளன. அந்த பெண்ணின் தலை, கழுத்து பகுதிகள் கடித்து தின்னப்பட்டதால் அதிகமான ரத்தம் வெளியேறி அந்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடல் மறுநாள் காலை அவரது கணவரால் பன்றிகள் கூடாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் இறப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.