Skip to main content

நேரில் ஆஜராக முடியாது; இந்திய அரசுக்கு ட்விட்டர் சி.இ.ஓ பதில்...

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

fdbgdfbdf

 

இந்திய மக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டும், ட்விட்டரில் தகவல் திருட்டு தொடர்பாகவும் தெளிவுபடுத்த ட்விட்டர் சி.இ.ஓ மற்றும் அதன் முக்கியமான ஐந்து ஊழியர்கள் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு ட்விட்டர் தலைமைக்கு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கூறி கடிதத்தை அனுப்பியது. 7 ஆம் தேதி அவர்கள் ட்விட்டர் ஊழியர்கள் இந்த குழு முன் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அது 11 ஆம் தேதியாக மாற்றப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குழு முன் ஆஜராக முடியாது என ட்விட்டர் தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்