முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மொழிப் படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் விருது வாங்கியது. இதனால் இரண்டு படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்து மரியாதை செலுத்தியுள்ளது. தற்பொழுது அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்தியா மற்றும் பூட்டான் ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மென் மற்றும் அவரது தூதரக குழுவினர் இப்பாடலை ஒலிக்கச் செய்து நடனமாடிய காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.