Skip to main content

"ஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது" - அமெரிக்காவின் என்ட்ரியால் பொருமும் பிரான்ஸ்!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

france minister

 

பிரான்ஸ் நாட்டிடமிருந்து அணு ஆற்றலைக் கொண்டு இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்தநிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பாதுகாப்பு கூட்டாண்மையை அமைத்துள்ளன.

 

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக இந்த கூட்டாண்மை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த கூட்டாண்மை, அமெரிக்காவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்க வழி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து அறிவித்துள்ளது.

 

இதனால் பிரான்ஸ் நாடு கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா தங்களை முதுகில் குத்திவிட்டதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், "இது முதுகில் குத்தும் செயல். நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் நம்பிக்கை அடிப்படையிலான உறவை ஏற்படுத்தியிருந்தோம். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது. நான் இன்று மிகவும் ஆத்திரமாகவும், கசப்புணர்வோடும் இருக்கிறேன். நட்பு நாடுகளாக இருப்போர் ஒருவருக்கொருவர் இத்தகைய செயலை செய்து கொள்ளக் கூடாது. இந்த ஒருதலைபட்சமான, எதிர்பாராத முடிவு ட்ரம்ப் முடிவெடுப்பதை நினைவூட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்