மனிதர்கள் உடலில் விலங்குகள் உறுப்பை பொருத்தி இயங்கவைக்க முடியுமா என்பது தொடர்பாக, நீண்டகாலமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனையில், பன்றியின் சிறுநீரகம் ஒன்றையே வெற்றிகரமாக மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளது.
மூளை சாவு அடைந்த ஒருவருக்கு, சோதனை முறையில் மூன்று நாட்கள் பொருத்தப்பட்டிருந்த இந்த சீறுநீரகத்தின் செயல்பாடு, இயல்பானதாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்பார்த்த அளவு சிறுநீரையும் இந்த சீறுநீரகம் உற்பத்தி செய்தாகவும் அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பன்றியின் சீறுநீரகம் மனிதனுக்கு பொருத்தபட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது, மருத்துவதுறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் விலங்குகளின் உடல் உறுப்பை பொருத்துவதற்கான கதவுகளையும் இந்த சோதனையின் வெற்றி திறந்துள்ளது.