தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கட்டமேடு என்ற பகுதியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா பதிவெண் எண் கொண்ட காரில் நான்கு பேர் திருநெல்வேலி நோக்கி பயணத்த நிலையில், லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த வில்லியம் ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிக் கொண்ட கார் முழுவதுமாக சேதமடைந்ததால் கிரேன் மூலம் கார் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி நெல் மூட்டை ஏற்றி வந்ததோடு, அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.