கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடியை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி தற்போது புதிய சிக்கல் ஒன்றில் மாறியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகியான ரபி பிர்ஸாடா சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். கையில் விஷப்பாம்புகளை பிடித்தவாறு அவர் பேசும் போது கீழே மலைப்பாம்புகள் மற்றும் முதலை ஆகியவை இருந்தன. அந்த வீடியோவில் பிரதமர் மோடியை மிரட்டும் வகையில் பேசிய அந்த பெண், மிரட்டலுக்கு பின் ஒரு பாடலும் பாடினார்.
இந்த வீடியோவுக்கு இந்தியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,வன விலங்குகளை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக, அவர் மீது பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.