Published on 27/04/2022 | Edited on 27/04/2022

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. எனினும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிப் பெரும்பான்மையை இழக்கும் போது மட்டுமே, ராஜினாமா செய்ய முடியும் என்றும், அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
தங்களைப் பதவி விலகுமாறு ஒட்டுமொத்த மக்களும் கோரவில்லை என்றும், ஒரு தரப்பினர் மட்டுமே கூறுவதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். மக்கள் தங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், எனவே அடுத்த தேர்தலிலும் ஆட்சி அமைப்போம் என்று அவர் தெரிவித்தார்.