Published on 27/11/2019 | Edited on 27/11/2019
இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இந்தியா இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே நாளை முதல் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.