Published on 11/12/2019 | Edited on 11/12/2019
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சிறிய கௌபாய் தொப்பி அணிந்த புறாக்கள் பறந்து திரிகின்றன. இதனை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் காணப்படும் சில புறாக்கள் சிவப்பு நிறத்தில் குட்டி தொப்பியை அணிந்துள்ளன. இதன் பின்னால் இருக்கும் ரகசியம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொப்பிகளை யாரோ புறாக்களுக்கு அணிவித்திருக்க வேண்டும். அவற்றைத் துன்புறுத்தி கீழே விழாமல் தலையில் தொப்பியை ஒட்டியிருக்கவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.