Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியாவில் தங்கியிருந்த தீவிரவாதிகள்... ராணுவ தளபதி பரபரப்பு தகவல்...

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் 390 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

srilankan military chief claims terrorist related to srilanka blast had visited india

 

 

இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாயக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "இலங்கையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளில் சிலர் இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளனர். காஷ்மீர், பெங்களூரு, கேரளாவுக்கும் அவர்கள் சென்றதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அவர்கள் பயிற்சி எடுப்பதற்காகவோ அல்லது சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக சென்று இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த அமைதியை தற்போது அவர்கள் கெடுத்துள்ளனர். ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விரைவில் மீண்டும் நாடு முழுவதும் அமைதியான சூழல் உண்டாகும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்