
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரான்சில் 33 ஆவது ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று (26/07/2024) தற்போது தொடங்கியுள்ளது. இதனால் செயின் நதிக் கரையின் ஓரத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான நிகழ்ச்சிகளுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் என அனைவரும் சுமார் 162 படகுகள் மூலமாக செயின் நதிக்கரையில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது இதற்கான தொடக்க விழாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.