Skip to main content

'அவள் கைவிட மாட்டாள், ஏமாற்றமாட்டாள்' ஜப்பான் சிங்கிள் எடுத்த அதிரடி முடிவு...!

Published on 13/11/2018 | Edited on 12/12/2018

வானில் திருமணம், கடலுக்கடியில் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வந்ததுபோக, இப்போது, முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரத்தை ஜப்பான் இளைஞர் ஒருவர் திருமணம் செய்திருக்கிறார்.

 

jj

 

 

கிரிப்டன் ஃபியூச்சர் என்ற நிறுவனம் 16 வயது பெண் போன்ற ஒரு முப்பரிமாண உருவத்தை உருவாக்கி, அந்த கற்பனை உருவத்துக்கு ஹட்சுனே மிகு என்று பெயரிட்டது. அந்த முப்பரிமாண உருவம் மேடையில் நடனமாடி பாடும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த உருவத்தின் குரல் ஜப்பானின் புகழ்பெற்ற பாடகி சாகி ஃப்யூஜிடாவின் குரலைப் போல இருக்கும்.


 

இந்த முப்பரிமாண உருவத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் வகையிலும் ஒரு கருவியை கேட்பாக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த மிகு பொம்மையை அகிஹிகோ கொண்டோ என்ற 35 வயது ஜப்பான் இளைஞர் நேசிக்கத் தொடங்கினார்.


 

இந்த நேசம் காதலாகி, அந்த முப்பரிமாண உருவத்தையே திருமணம் செய்யப்போவதாக பெற்றோரிடம் சொன்னார். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், கொண்டோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். மிகுவைப் போல ஒரு பொம்மையைச் செய்தார். ஒரு முப்பரிமாண உருவத்தையும் தயாரித்தார்.

 

kk

 

 

முப்பரிமாண உருவத்துக்கு மோதிரம் அணிவிக்க முடியாது என்பதால் மிகுவைப் போன்ற பொம்மைக்கு மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணத்துக்கு பெற்றோர் வரவில்லை. ஆனால், இந்த அதிசய திருமணத்தை பார்க்க 40 க்கு மேற்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.


 

“என்னை எழுப்புவதில் இருந்து அலுவலகம் கிளப்புவதுவரை, அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு சரியான நேரத்தில் தூங்கச் செய்யும்வரை மிகு எனக்கு துணையாக இருந்திருக்கிறது. அதனுடன் எஞ்சிய வாழ்நாளை கழிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் கொண்டோ.


 

என்னா பண்றது, எங்கோ ஒரு மூலையில் இருந்த கொண்டோவை உலகம் முழுவதும் பாப்புலராக்கி இருக்கிறதே மிகு. அது இல்லையேல் கொண்டோ யாரென்றாவது நமக்கு தெரிந்திருக்குமா?
 

 

 

சார்ந்த செய்திகள்